புதுச்சேரி, ஏப்ரல் 1:
புதுச்சேரி மாநிலம், உழவர்கரை தொகுதியில் வரும் தேர்தலுக்காக சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் சரவணன், தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
தனக்கு ஒதுக்கப்பட்ட ‘குக்கர்’ சின்னத்தில் வாக்குக் கேட்டு, தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அவர் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளர் சரவணனுடன் அப்பகுதி இளைஞர்கள் ஏராளமானோர் திரளாகப் பங்கேற்று, அவருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.
பிரச்சாரத்தின் போது, வழிநெடுகிலும் உள்ள பொதுமக்கள் வேட்பாளர் சரவணனுக்கு ஆரத்தி எடுத்தும், அவர் மீது பூக்கள் தூவியும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மக்களின் இந்த வரவேற்பு தமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாகக் கூறிய வேட்பாளர் சரவணன், தொகுதி மக்களின் மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..