புதுச்சேரி, ஏப்ரல் 01, 2026:
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, உழவர்கரை தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் செல்வ புஷ்பலதா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டிய அவர், தனது கட்சியின் சின்னமான ‘கரும்பலகை’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த வாக்கு சேகரிப்பின் போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.
பொதுமக்களிடம் பேசிய வேட்பாளர் செல்வ புஷ்பலதா, தான் வெற்றி பெற்றால் தொகுதியின் வளர்ச்சிக்கும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார். வேட்பாளரின் தீவிர பிரச்சாரத்தால் அப்பகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.


More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!