June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம் மேற்கு தொகுதியில் எம்எல்ஏ அருள் தலைமையில் மாபெரும் முற்றுகைப் போராட்டம்.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி,சூரமங்கலம் 20,22 – ஆவது கோட்ட மக்களுக்கு பெரிதும் பயன்படும் மிகவும் பிரதான சாலையான ஜங்சன் முதல் சொட்டையன் தெரு வழியாக போடிநாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி,வெள்ளையகவுண்டன்தெரு,சேலத்தாம்பட்டி,காட்டூர்,சிவதாபுரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலையை போட விடாமல் தடுப்பதோடு சொட்டையன்தெரு இரயில்வே தரை பாலத்தை சரியாக பராமரிக்காமல் தண்ணீர் தேங்கும் நிலைக்கு உள்ளாக்கியுள்ள சேலம் இரயில்வே ரயில்வே மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து ரயில்வே மண்டல மேலாளர் மற்றும் கூடுதல் கோட்ட மேலாளர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.அவர்களும் மேற்குறை அமைப்பதற்கு கால தாமதமாகும்,சாலை இன்னும் 30 நாளுக்குள் அமைத்து தருவதாக உறுதி அளித்தனர் அதனைத் தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.