February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுக்கோட்டை, திருச்சியில்மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருவரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்கிறார். பிறகு திருச்சியில் நடைபெறும் மோடி பொங்கல் விழாவை தொடங்கி வைத்து மத்திய மந்திரி அமித்ஷா பேசுகிறார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதையொட்டி அந்தமான் தீவுக ளின் தலைநகர் போர்ட் பிளேர் விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்புதுறைக்கு சொந்தமான விமானம் மூலம் புறப்பட்டு நாளை 4ந்தேதி (ஞாயிற் றுக்கிழமை) மாலை 4.55 மணிக்கு திருச்சிக்கு வருகி றார்.

திருச்சி விமான நிலையத்தில் இறங்கியதும் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு புதுக்கோட்டைக்கு செல்கி றார். புதுக்கோட்டை, பாலன் நகர், கருவேப்பிலான் கேட் பகுதியில் அமைக்கப்பட்
டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் அவரது ஹெலிகாப்டர் தரை இறங்குகிறது.

பிரமாண்டானபொதுக்கூட்டம்

பிறகு அங்கிருந்து காரில் புறப்பட்டு ‘தமிழகம் தலை | நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பிலான தமிழக பா.ஜனதா
தலைவர் நயி னார் நாகேந் திரன் நடத்தும் யாத்திரை நிறைவு விழா பொதுக் கூட்டம் மேடைக்கு செல்கிறார்.பிறகு பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா சிறப்புரை ஆற்றுகிறார் இந்த கூட்டத்தில் பாஜக மூத்த நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டத் தில் கலந்து கொள்கிறார்கள் பிறகு அமித்ஷா பேசி முடித்து விட்டு காரில் புறப்பட்டு திருச்சிக்கு வருகிறார். இரவு 8 மணி
அளவில் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் அவர் தங்கி இரவு ஓய்வு எடுக்கிறார்.
நாளை மறுநாள் 5 ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி
அளவில் தனியார் ஓட்டலில் இருந்து காரில் புறப்படும் அமித்ஷா திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். சாமி தரிசனம் முடித்துவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு மீண்டும் தனியார் ஓட்ட லுக்கு வருகிறார்.

போடி பொங்கல் விழா

அங்கு சுமார் ஒரு மணி நேர ஓய்விற்கு பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை பங்கேற்கிறார்.
மதியம் 1.05 மணிக்கு அங்கிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கார் மூலம் புறப்பட்டு செல்கிறார். திருச்சி விமானநிலையத்தில் இருந்து 1.20 மணிக்கு ராணுவ விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

பலத்த பாதுகாப்பு

மத்திய மந்திரி அமித்ஷா வருகையை முன்னிட்டு அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பான இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. அவர் செல்லும் வழித்தடங்கள் ஹெலிப்பேடுகள் மற்றும் அமித்ஷா செல்லும் சாலை பாதைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் இருந்து மத்திய சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் அதிகாரிகள் வருகை தர உள்ளார்கள். இவர்கள் திருவரங்கம் ரங்கநாதர் கோவில் பகுதி மற்றும் திருச்சி விமான நிலைய பகுதி மற்றும் புதுக்கோட்டையில் பொதுக்கூட்டம் நடைபெறும் விழா மேடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்ய இருக்கிறார்.

மோடி பொங்கல் ஏற்பாடு

நாளை மறுநாள் ஐந்தாம் தேதி திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைபெறும் மோடி பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.மைதானத்தில் 1008 பெண்கள் பொங்கல் வைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது மேலும் இங்கு பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது.மோடி பொங்கல் விழாவை தொடங்கி வைத்துவிட்டு மத்திய மந்திரி அமித்ஷா அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் மேடையில் பேசுகிறார்.மத்திய மந்திரி அமித்ஷா திருச்சி வருகையை முன்னிட்டு பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

திருச்சி மற்றும் புதுகை மாவட்ட கலெக்டர்கள் , மாநகர மற்றும் மாவட்ட போலீசார் பாதுகாப்பு வழங்க ஒத்துழைக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Facebook
YouTube
Instagram
WhatsApp