திருச்சி, ஜன. 4 –
திருச்சியில் , போதைப் பொருள் ஒழிப்பு சாதி, மத மோதல் தடுப்பு உள்ளவற்றை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ நடை பயணத்தை மேற்கொள்கிறார்.திருச்சியில் தொடங்கி வருகிற 12ந்தேதி மதுரையில் முடிக்கிறார்.இதன் தொடக்க விழா நேற்று திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு நடை பயணத்தை தொடங்கி வைத்து பேசினார்.நிகழ்ச்சியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இன்று 2வது நாள் சமத்துவ நடைபயணம் நடைபெற்றது
திருச்சி தெற்கு மாவட்ட மதிமுகவின் எல்லையான மணிகண்டம் ஒன்றியப் பகுதி பஞ்சப்பூர் கன்வென்சன் சென்டர் அருகில் உள்ள செங்குறிச்சி பிரிவு சாலை சந்திப்பில் காலை 7 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைப்பயணத்தை தொடங்கினார்.அப்பொழுது மதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த முதல் இடத்தில் சிவனடியார்கள் திருமுறைகள் பாடி , பூரண கும்ப மரியாதையுடன், நாகசுர வாத்திய இசையுடனும், சைவ நெறிப்படியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாகமங்கலத்தில் 11.30 மணிக்கு இஸ்லாமிய சான்றோர்கள் பங்கேற்று திருக்குர் ஆன் ஓதி வரவேற்றனர்.
இந்த இரண்டாம் நாள் நடைபெற நிகழ்ச்சியில்மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி, மாநில துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சண்முகம், மணவை தமிழ்மாணிக்கம் டிடிசி சேரன் வெளியிட்டுப் பிரிவு மாநில துணை செயலாளர் நடுவை முருகன், பகுதி செயலாளர்கள் ஆசிரியர் முருகன், ஆர் கே ஆர் வினோத், ஜங்ஷன் செல்லதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர். பிறகு அங்கு ஓய்வு எடுக்கிறார்
இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு பாத்திமாநகர் தேவாலயம் முன்பு கிறித்தவ நெறிப்படி, பங்குத் தந்தை தலைமையில் விவிலியம் படித்து , தோத்திரம் சொல்லி அப்பகுதி மக்கள் வரவேற்கின்றனர்.இதற்காக மூன்று சமயக் கோவில்களின் படம் வைக்கப்பட்டுள்ள பிரத்யோகமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.