அரியலூர் பெரம்பலூர் புறவழிச் சாலையில் மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது விழாவில் மாவட்ட செயலாளரும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சருமான சிவசங்கர் மற்றும் திமுக முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொண்டு கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தனர்

விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது ஒவ்வொரு இடத்திலும் திமுகவிற்கு என்று அலுவலகம் இருக்க வேண்டும் என கலைஞர் சொல்வதை தான் தற்பொழுது நிறைவேற்றி வருகிறோம் தமிழகத்திலேயே ஒன்றிய செயலாளர்களுக்கு மக்களை சந்திப்பதற்காக ஜீப் வழங்கியவர் அமைச்சர் சிவசங்கர் தான். மேலும் சட்டமன்றத்தில் எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் எந்த உறுப்பினர் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லக்கூடிய ஒரே ஆள் சிவசங்கர் தான். தலைவரின் கண்ணசைவை வைத்து அதன் படி நடந்து கொள்ளக் கூடியவர். தலைவருக்கு அருகில் பல்வேறு மூத்த அமைச்சர்கள் இருந்தபோதிலும் சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும்போது அது குறித்து பேச அவரைத்தான் தலைவர் பேச சொல்வார். வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு சிறப்பான ஆட்சியை நமது தலைவர் தந்துள்ளார். அரியலூர் பெரம்பலூர் திருச்சி மாவட்டங்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களையும் தந்துள்ளார் இந்த ஆட்சியைத்தான் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன் என்கிறவர் எல்லாம் குறை சொல்லுகிறார்கள். மீடியாக்காரர்கள் தான் அவர் நடந்தார் போனார் சென்றார் வந்தார் என்கிறார்கள் நமது தலைவரை விட நல்ல ஆட்சியை தருவார் என தமிழக மக்கள் நம்புவார்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள் ஒரு காலம் நம்ப மாட்டார்கள் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என கூறினார் மேலும் அரியலூர் கலைஞர் அறிவாலயத்திற்கு கலைஞரின் சிலையை நானே செய்து தந்து விடுகிறேன் எனவும் கூறினார்
விழாவில் திமுக கட்சியை சேர்ந்த மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

More Stories
பொருளாதார மந்தநிலையால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஊராட்சியில் is தவெக எம்.எல்.ஏ இளையராஜா நன்றிப் பயணம்: பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்வு காண உறுதி!
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் நடைபெற இருக்கின்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் மாண்புமிகு தமிழக அமைச்சரும்தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களை….நேயம் மக்கள் கழகதலைவர் G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களும்தமிழக வெற்றி கழக புதுச்சேரி பொறுப்பாளர்களானசுவாமிநாதன் ex MLA அவர்கள்,ஆசானா ex MLA அவர்கள்,தனவேல் ex MLA அவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.