திருப்பூர் தாராபுரம் ரோடு செட்டிபாளையம் அடுத்த பூங்கா நகர் பின்புறம் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் மனைப்பிரிவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 5 சென்ட் நிலத்தில் விநாயகர் மற்றும் வாராஹி அம்மன் கோவில் கட்டி முடிக்கப்பட்டு வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் கரைப்புதூர் ஊராட்சி சார்பாக கோயில் முன்பு அறிவிப்பு பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பு பதாகையில்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஊராட்சி ஒன்றியம் கரைப்புதூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீநகர் எக்ஸ்டென்ஷன் என பெயரிட்டுப்பட்டுள்ள மனை பிரிவில் உள்ள 80 சென்ட் இடம் ஊராட்சிக்கு சொந்தமான இடம் இந்த இடத்தில் மத வழிபாட்டு தலங்கள் கட்டிடங்கள் ஏதும் கட்டக் கூடாது என கரைப்புதூர் ஊராட்சி சார்பாக அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளதால் ஆத்திரமடைந்த அப்பகுதி ஊர்பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி நிறுவனர் திரண்டு அப்பகுதி தங்களுக்கு வழிபட்டுத்தளம் வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பாக காணப்படுகிறது.

More Stories
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!