வந்தவாசி, நவ 21:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய (மே) தொடக்கப் பள்ளியில் உலக குழந்தைகள் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை வேளாங்கண்ணி, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், திரைப்பட இயக்குநர் விஜய் ஆதிநாதன், எய்டு இந்தியா திட்ட மேற்பார்வையாளர் க.முருகன், உதவி ஆசிரியை சுஜாதா உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர். மேலும் மாணவர்கள் திருக்குறள் மற்றும் பழமொழிகளை வாசித்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்