வடமதுரை பகுதியில்
லஞ்ச ஒழிப்புத்துறையை கண்டித்து ஓட்டப்பட்ட போஸ்டர்கள்.
திண்டுக்கல், நவ.21-
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் திருமணம், பிறப்பு, பத்திரப்பதிவு உள்ளிட்ட பதிவுக ளுக்கு தினமும் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்திற்கு கடந்த 14 ஆண்டுகளாக நிரந்தரமாக சார்பதிவாளர் இல்லை. இதனால் முக்கியமான பதிவு பணிகள் கிடப்பில் விடப்படுவதால் பொது மக்கள் மாதக்கணக்கில் அலையும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆள்பற்றாக்குறை, லஞ்சம் உள்ளிட்ட பிரச்சினைகள்
குறித்து பாதிக்கப்பட்ட வர்கள் உயர் அதிகா ரிகளுக்கு மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை. இந்தநிலை யில் வடமதுரை பகுதியில் அக்கப்போர் இயக்கம் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் வடமதுரை சார்பதிவகத்தில் நடக்கும் லஞ்சம் தொடர்பாக திண் டுக்கல், சென்னை லஞ்ச ஒழிப்பு துறைக்கு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பல புகார்கள் அனுப்பியும், போனில் சொல் லியும் நடவடிக்கை இல்லை. இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா? என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்