June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்காணொளிக் காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில்ரூ.15.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடங்களைதிறந்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உயர்கல்வித் துறையின் சார்பில் ரூ.15.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடங்களை இன்று (20.11.2025) திறந்து வைத்தார்.

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இக்காணொளிக்காட்சி விழாவின் நேரலை ஒளிப்பரப்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் .சிவசங்கர் கலந்துகொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி;க் காட்சி வாயிலாக உயர்கல்வித் துறை சார்பில் கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 59 கோடியே 93 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள கல்லூரி கட்டடத்தில் குத்து விளக்கேற்றி வைத்து, மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் இயங்கி வந்த இக்கல்லூரிக்கென கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ.15.60 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டடங்கள் கட்டும் பணிகள் துவங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்பட்டு இன்றயைதினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கல்விசார் கட்டடங்களையும் திறந்து வைத்துள்ளார்கள். இந்தியாவில் வேறு எந்ததொரு மாநிலத்திலும் இல்லாத வகையில் மாணாக்கர்களின் கல்வி முன்னேற்றத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

அரசுப்பள்ளியில் கல்வி பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தினையும், மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தினையும் செயல்படுத்தியுள்ளார்கள். இதன் காரணமாக உயர்கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கின்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை 995 ஆகும். இவற்றில் 695 மாணாக்கர்களுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கப்பெற்று பயன்பெறுகின்றனர். அதாவது 3-ல் 2 பங்கு மாணாக்கர்கள் பயன்பெறுகிறார்கள் என்றால் நம்மை போன்ற கிராமப்புறங்களில் வாழக்கூடிய ஏழை, எளிய மக்கள் வாழுகின்ற பகுதியைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் உயர்கல்வி பயில்வதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆற்றுகின்ற பெரும் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணர்த்துகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மாணாக்கர்கள் அனைவரும் உயர்கல்வி பெறவேண்டும், அதன் மூலம் நல்லதொரு வேலைவாய்ப்பினை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். எனவே மாணாக்கர்கள் அனைவரும் நல்லமுறையில் கல்வி பயின்று வாழ்வில் சிறப்பானதொரு முன்னேற்றம் பெறவேண்டும் என மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் .சிவசங்கர் அவர்கள் தெரிவித்தார்.

மேலும், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடம் ரூ.1560 இலட்சம் மதிப்பீட்டில் கட்ட அரசாணை (நிலை) எண். 251 உயர்கல்வித் (டி1) துறை நாள்: 20.09.2023 மூலம் நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்புதல் வழங்கப்பட்டது. புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடமானது தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு தளம் 17,258 சதுரஅடி, முதல் மற்றும் இரண்டாம் தள பரப்பளவில் மொத்தம் 51,389 சதுரஅடி அளவில் கட்டப்பட்டு உள்ளது. இக்கல்லூரி கட்டடத்தில் 14 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள், 2 கணினி ஆய்வகங்கள், கருத்தரங்கு கூடம், நூலகக்கூடம் சுகாதாரமையம், முதல்வர் அலுவலக அறை. துறைத் தலைவர்கள் அறை, பணியாளர்கள் அறை, உடற்கல்வி இயக்குநர் அறை, ஆவணப் பாதுகாப்பு அறை, மாணவர்கள் கழிப்பறை, மாணவிகள் கழிப்பறை, மாற்றுத் திறனாளிகள் கழிப்பறை, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் தீயணைப்பு வசதிகளுடன் எழில் மிகு தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு புறமும் சுற்றுச்சுவர் மற்றும் தேவையான அணுகுசாலை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கட்டடப் பணிகளானது 15.04.2024 அன்று துவங்கப்பட்டு தற்போது கட்டடத்தின் பணிகள்யாவும் முழுமையாக முடிக்கப்பட்டு துறைவசம் ஒப்படைக்கப்பட்டு, கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்றையதினம் புதியதாக திறந்து வைக்கப்பட்டுள்ள கல்லூரி கட்டடங்கள் குறித்து கல்லூரியில் பயிலும் மாணவி புவனா என்பவர் தெரிவிக்கையில், நான் அரியலூர் மாவட்டம், வாரியங்காவல் கிராமத்திலிருந்து கல்வி பயில்வதற்கு வருகின்றேன். முன்னதாக எங்களது கல்லூரியானது வேறொரு கட்டடத்தி;ல் இயங்கி வந்தது. இன்றையதினம் எங்கள் கல்லூரிக்கென புதியதாக கட்டப்பட்டுள்ள கல்லூரிக் கட்டடங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது மாணவர்களுக்கு தேவையான ஆய்வக வசதிகள், குடிநீர் வசதிகள், கணினி ஆய்வகங்கள், நூலகக் கட்டடங்கள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. நாங்கள் கல்வி பயில்வதற்கு இத்தகைய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி என மாணவி புவனா என்பவர் தெரிவித்தார்.

இதேபோன்று மாணவி உதயதாரணி ஜெயக்குமார் என்பவர் தெரிவிக்கையில், நான் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் இரண்டாமண்டு கல்வி பயின்று வருகிறேன். இதற்குமுன் கல்லூரி இயங்கி வந்த இடத்தில் இடவசதிகள் குறைவாக இருந்தது. பள்ளி வளாகத்தின் கட்டடத்தில்தான் கல்லூரியானது இயங்கி வந்தது. காலை மற்றும் மாலை என இரு வேளைகள் தனித்தனியே நடைபெற்று வந்தது. தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய கல்லூரி கட்டடத்தில் வகுப்பறைகள், கலையரங்கம், ஆய்வகங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் எவ்வித இடையூறுமின்றி சிறப்பாக அமைந்துள்ளது. கல்லூரியின் அருகிலேயே சாலைகள் உள்ளதால் பேருந்து வசதிகளும் எளிதாக கிடைக்கிறது. எங்களது கல்விக்கு முக்கியத்துவம் அளித்து இத்தகைய வசதிகளை அமைத்துக் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு எனது சார்பிலும், மாணாக்கர்கள் அனைவரது சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மாணவி உதயதாரணி ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்..சிவராமன், ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் .சுமதி சிவக்குமார், தஞ்சாவூர் மண்டல கல்விக் கல்லூரி இணை இயக்குநர் .குணசேகரன், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (மு.கூ.பொ) முனைவர்.இராசமூர்த்தி, ஜெயங்கொண்டம் நகர்மன்ற துணைத்தலைவர் .கருணாநிதி, உதவி செயற்பொறியாளர்கள்.கார்த்திகேயன், .பாலமுருகன், உதவி பொறியாளர்கள் .சதிஷ்குமார், .கலைமதி, .ஹென்றிசாம்செல்வின், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.