திமுக கூட்டணி வேட்பாளர் ப அப்துல் சமத் பேச்சு
தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் மதச்சார்பற்ற திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ப அப்துல் சமத் மீண்டும் இரண்டாவது முறையாக மணப்பாறை தொகுதியில் போட்டியிடுகின்றார்
தொடர்ந்து மணப்பாறை வையம்பட்டி மருங்காபுரி துவரங்குறிச்சி உள்ளிட்ட ஒன்றியங்களில் தினம்தோறும் காலை முதல் இரவு வரை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் கிராமம் கிராமமாக சென்று திராவிட மாடல் அரசின் 5 ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு ஏராளமான திட்டங்கள் பெற்றுத் தந்துள்ளது குறித்தும் மேலும் பல திட்டங்கள் மூலம் செய்த சாதனைகள் குறித்தும் வாக்காளர்கள் மத்தியில் விளக்கிப் பேசி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்
நேற்று மருங்காபுரி ஒன்றியம் பழுவஞ்சி,கவுண்டம்பட்டி வடநாடு பாலக்குறிச்சி கலிங்கப்பட்டி டீ இ இடையபட்டி உள்ளிட்ட ஊராட்சி கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ப அப்துல் சமத் கடந்த ஐந்து ஆண்டுகளில் மருங்காபுரி ஒன்றியங்களில் பல்வேறு கிராமங்களில் நிழற்குடை நீர்நிலை தேக்க தொட்டி அங்கன்வாடி கிராம சாலை பாலங்கள் ரேஷன் கடை உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக சட்டமன்ற உறுப்பினராக சிறந்த முறையில் செய்து கொடுத்துள்ளேன் மேலும் மணப்பாறை தொகுதி மக்கள் உயர்கல்வி பயில திருச்சி அல்லது மற்ற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது இதைக் கருத்தில் கொண்டு சட்டமன்றத்தில் நான் மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு அரசு கலைக்கல்லூரி வேண்டும் மேலும் 10ம் வகுப்பு வரை பதித்து தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்காக வையம்பட்டி பகுதியில் தொழிற்பயிற்சி கல்வி நிலையம் உள்ளிட்ட கல்லூரிகளை கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு முயற்சிகள் எடுத்து அதை சட்டமன்றத்தில் பேசி மணப்பாறை தொகுதியில் அதை செயல்படுத்தியுள்ளேன்.
இதற்கு முன்னதாக 10 ஆண்டு காலம் ஆட்சி பொறுப்பில் இருந்த அதிமுக மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை அப்போதைய அதிமுகவில் கல்வி அமைச்சராக இந்தத் தொகுதியில் ஒருவர் இருந்திருந்தார் அவரால் செயல்படுத்த முடியாத மணப்பாறைக்கு கல்லூரி கனவை திராவிட மாடல் ஆட்சிக்கு வந்த ஓர் ஆண்டில் மணப்பாறை பகுதிக்கு இந்த கல்லூரியை கொண்டு வந்து மிகப்பெரிய கட்டிடம் கட்டி திறக்கப்பட்டும் தற்போது நான்கு ஆண்டுகள் கல்லூரி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது



பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை ஆனால் நான் மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில் சிறப்பான முறையில் நான் என் மனசாட்சிப்படி நேர்மையுடனும் மக்கள் பணி செய்திருக்கின்றேன் ஆகையால் தான் மீண்டும் இங்கே மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறேன் மீண்டும் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன் இன்னும் பல மக்கள் நலத்திட்டங்களை மணப்பாறை தொகுதி மக்களுக்கு செயல்படுத்திட மீண்டும் ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று சுட்டரிக்கும் வெயிலில் வாக்காளர்கள் மத்தியில் தீவிர வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!