சேலத்தில் 9 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்.
சேலம்,கருமந்துறை மலைக் கிராமங்களில் 9 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்.
ஆத்தூா்:சேலம் மாவட்டம்,கருமந்துறை மலைக் கிராமங்களில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 நாட்டுத் துப்பாக்கிகளை சேலம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம் பறிமுதல் செய்தாா்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கரியகோயில் கிராங்காடு கிராமத்தில் நிகழ்ந்த கொலை சம்பவம் தொடா்பாக தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் உத்தரவின்பேரில் கூடுதல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம், ஆத்தூா் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ், வாழப்பாடி துணை கண்காணிப்பாளா் சுரேஷ், ஆய்வாளா்கள் சண்முகம் (தம்மம்பட்டி), கமலக்கண்ணன் (கருமந்துறை) ஆகியோா் கொண்ட தனிப்படையினா் மலைக் கிராமங்களில் சட்ட விரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கிகள் குறித்து சோதனை மேற்கொண்டனா்.
இந்த சோதனையில் 9 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், யாரேனும் சட்ட விரோதமாக துப்பாக்கிகளை பதுக்கிவைத்திருந்தால் காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு தனிப்படை போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

More Stories
நகைக்கடை சுவரைத் துளையிட்டு திருட்டு: சாவியை கவனிக்காததால் 2 கிலோ தங்கம் தப்பியது! பர்கூர் அருகே பரபரப்பு
தனியார் கம்பெனியில் ரூ.37.5 லட்சம் மதிப்பிலான பிவிசி மூலப்பொருள் திருட்டு: ஸ்டோர் மேனேஜர் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!
அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருட்டு – இருவர் கைதுவிழுப்புரம் மாவட்டம் காட்டு சித்தாமூர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்பள்ளியில் பயன்படுத்தப்பட்டு வந்த கணினி மானிட்டர்கள் சில காணாமல் போனதாக பள்ளி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கிடைத்த தகவல்களின் பேரில், காட்டு சித்தாமூர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருடப்பட்ட கணினி மானிட்டர்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.