புதுச்சேரி, பிப். 06:
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் முதுநிலை பட்டதாரி நிறுவனத்தில், மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் புதிய தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டும் பணிகளுக்கு இன்று காலை பூமி பூஜை நடைபெற்றது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
இத்திட்டம் சுமார் ரூ.11.93 கோடி செலவில் பொதுப்பணித்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இதில் 50 படுக்கைகள் கொண்ட அதிநவீன தீவிர சிகிச்சை பிரிவு (Critical Care Unit) அமைக்கப்பட உள்ளது.
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உட்கட்டமைப்பு இயக்கம் (PM-ABHIM) திட்டத்தின் கீழ் இதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9:30 மணியளவில் நடைபெற்ற இந்த விழாவில், புதுச்சேரி மாநில முதல்வர் திரு. ந. ரங்கசாமி அவர்கள் கலந்துகொண்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. க. லட்சுமி நாராயணன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்த புதிய கட்டடம் கட்டி முடிக்கப்படுவதன் மூலம், புதுச்சேரி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு அவசர கால சிகிச்சைகள் விரைவாகவும், தரம் உயர்த்தப்பட்ட வசதிகளுடன் கிடைக்க வழிவகை ஏற்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை செயலர் திருமதி டாக்டர் அ. முத்தம்மா இ.ஆ.ப, சுகாதாரத்துறை செயலர் திரு. சௌத்ரி முகமது யாசின் இ.ஆ.ப, சுகாதாரத்துறை இயக்குநர் திரு. S. செவ்வேல், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் திரு. K. வீரச்செல்வம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.