June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வேல்ஸ் குழுமம் சார்பில் முந்திரி சாகுபடியில் சிறந்த வேளாண் செய்முறைகள் குறித்த பயிற்சி

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் கிராமத்தில் வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம் (VISTAS), பல்லாவரம் சார்பில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ((DST/SEED/SCSP/2023/164)) நிதியுதவியுடன், “முந்திரி சாகுபடியில் சிறந்த வேளாண் செய்முறைகள்” என்ற தலைப்பில் 5 நாட்கள் பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றது. 21.01.2026 முதல் 25.01.2026 வரை நடைபெற்ற இப்பயிற்சியில், தினமும் 50 பயனாளிகள் வீதம் மொத்தம் 250 விவசாய பயனாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முந்திரி சாகுபடியில் மண் மேலாண்மை, தரமான நடவுப் பொருட்கள் தேர்வு, உர மேலாண்மை, நீர் பயன்பாடு, நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடு, அறுவடை மற்றும் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை போன்ற சிறந்த வேளாண் நடைமுறைகள் குறித்து விரிவான பயிற்சி வழங்கப்பட்டது. திட்ட முதன்மை ஆய்வாளர் டாக்டர் பி. சண்முகசுந்தரம் அவர்கள் நிகழ்வை தொடங்கி வைத்தார், இதனைத் தொடர்ந்து திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி. ஜெகதீசன் அவர்கள் சிறப்புரையாற்றி, முந்திரி சாகுபடியில் தரமான உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்து விவசாயிகளுக்கு வழிகாட்டினார். முந்திரி சாகுபடியில் முக்கிய சிறப்பு தோட்டக்கலை நடைமுறைகள் பற்றி, தோட்டக்கலைத் துறையைச் சேர்ந்த திட்ட இணை ஆய்வாளர் மா. குமரேசன் (உதவி பேராசிரியர்) அவர்கள் அறிவியல் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக விளக்கினார். பயிற்சியின் போது, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 5 நாட்கள் உரையாற்றினர். இப்பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், கற்றுக் கொண்ட நடைமுறைகளை தங்கள் முந்திரி தோட்டங்களில் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர். இப்பயிற்சி, செய்யூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முந்திரி சாகுபடியை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக அமையும். பயிற்சியின் இறுதியில் டாக்டர். D. ஏழுமலை நன்றியுரை கூறினார்
செங்கல்பட்டு மாவட்ட ஒளிப்பதிவாளர் சி விஜயன்
9677043348