June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழ்நாடு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க… சி.ஜோசப் விஜய் எனும் நான்”..புதிய CM! பதவியேற்பு!

தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டப்பேரவைத் தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. இதில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தமிழ்நாடு அரசியல் களத்தில் ஒரு வரலாற்றுச் சாதனையோடு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் சிஎம். அரியணையில் ஏறினார். ஆனால், அவரின் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய சவாலும், அரசியல் நெருக்கடியும் காத்திருப்பதை அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் சி. ஜோசப் விஜய் சர்க்கார் அமைத்த நிலையில், அந்த ஆதரவு அனைத்தும் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளிடம் இருந்தே கிடைத்துள்ளது என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்க முக்கியமான விஷயம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அவர்கள் இப்போதும் திமுக கூட்டணியில்தான் இருக்கிறார்கள். சி. ஜோசப் விஜய் தனது அரசியல் வருகையின் போது “ஊழலற்ற நிர்வாகம்” மற்றும் “பழைய அரசியல் முறைகளுக்கு மாற்றம்” என்பதைத் தான் பிரதான முழக்கமாக முன்வைத்தார். குறிப்பாக, கடந்த கால திமுக ஆட்சியின் குறைபாடுகளையும், சில மந்திரிக்கள் மீதான ஊழல் புகார்களையும் தவெக கடுமையாக விமர்சித்து வந்தது. ஆனால், இப்போது அதே திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் தயவில்தான் சி.ஜோசப் விஜய் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்ற நிலையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தவெக தலைவர் விஜய்க்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். சி. ஜோசப் விஜய் எனும் நான் எனக் கூறி தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்று கொண்டார் விஜய். அவருடய மந்திரியாவையில் மந்திரிகள் பதவியேற்கவுள்ளனர். கோட், சூட்டுடன் மேடையேறிய விஜய் ஆண்டவன் மீது ஆணையாக என்று சொல்லி பதவியேற்றுள்ளார்.

தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற நிகழ்வு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் விஜய்யுடன் முக்கிய மந்திரிக்கள் பதவியேற்றனர். தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், பொருளாளர் வெங்கட்ராமன், துணைப்பொதுச் செயலாளர் நிர்மல்குமார், செய்தி தொடர்பாளர் ராஜ்மோகன் ஆகியோர் மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர்.

காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற டாக்டர் டி.கே. பிரபு, சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்ற கீர்த்தனா ஆகியோரும் மந்திரிகளாகப் பதவியேற்றனர். இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராகுல் காந்திக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்பட்டது. விஜய் வழக்கமான உடைகளுக்கு பதிலாக கோட், சூட்டுடன் விஜய் முதல்வராக பதவியேற்றார்.

விஜய்யை முதல்வராக பதவியேற்க வருமாறு மேடையில் அறிவிக்கப்பட்டதில் இருந்து அரங்கத்தில் ஆரவாரம், விசில் சத்தம் அதிர வைத்தது. பாகுபலி படத்தில் மன்னராக பதவியேற்கும்போது அரங்கம் அதிரும் காட்சி மிகவும் பிரபலம். அதேபோல விஜய் முதல்வராக பதவியேற்கும்போது, சி. ஜோப் விஜய் எனும் நான் என்று அவர் பதவியேற்கும்போது அரங்கம் அதிர்ந்தது. பாகுபலி படக்காட்சியை நேரு ஸ்டேடியத்தில் ரீ – கிரியேட் செய்தது போல் காட்சியளித்தது.

தவெக தலைவர் சி. ஜோசப் விஜய், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முக்கிய முடிவு எடுத்துள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் அவர் கையெழுத்திட்டார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் விஜய், சர்க்கார் வந்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்” என்று தெளிவாக அறிவித்திருந்தார். இந்த வாக்குறுதி மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் முக்கிய திட்டமாகக் கருதப்பட்டது.

பதவியேற்பு விழாவில் முதல்வராகப் பொறுப்பேற்ற உடனேயே இந்தத் திட்டத்தை முதல் கையெழுத்தாக நிறைவேற்றியது, “சொன்னதை செய்யும்” விஜயின் உறுதியை வெளிப்படுத்துகிறது.

இந்தப் புதிய திட்டப்படி, இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இது தமிழ்நாட்டின் மின்சாரத் துறையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும். முன்பு 100 யூனிட்டுக்கு மட்டுமே இலவச மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், இப்போது அதை 200 யூனிட்டாக உயர்த்தியுள்ளது மக்களுக்கு பெரும் நன்மையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டின் மின்சாரத் துறை செலவு கணிசமாக அதிகரிக்கும் என நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்பு 100 யூனிட்டுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான மானியச் செலவு ரூ.7,752 கோடியாக இருந்தது.

இப்போது 200 யூனிட்டுக்கு உயர்த்தியதால் மானியச் செலவு ரூ.12,000 கோடியாக உயரும். இதனால் கூடுதலாக ரூ.4,248 கோடி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிதிச் சுமை புதிய அரசுக்கு முதல் கட்டத்தில் பெரும் சவாலாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொறுப்பேற்றுள்ளது. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றிய இந்த முடிவு, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் விஜயின் முதல் முடிவை வரவேற்றுள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டில் இந்த வாக்குறுதிகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் விஜய் மூன்று மிக முக்கியமான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து கையெழுத்திட்டார்.

இலவச மின்சாரம்: 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்.

போதைப் பொருள் தடுப்புப் படை: தமிழ்நாட்டில் வேரூன்றியுள்ள போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க சிறப்பு அதிகாரங்கள் கொண்ட பிரிவு.

தமிழர்களின் வீரத்திற்கும், துணிச்சலுக்கும் அடையாளமாகத் திகழும் ‘வீரமங்கை’ வேலுநாச்சியாரின் பெயரில் இந்த சிறப்புப் படைப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இது வெறும் காவல்துறைப் பிரிவு மட்டுமல்ல, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு ‘கேடயமாக’ செயல்படும் என முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு: பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தவும், அவசர காலங்களில் உடனடியாக உதவி செய்யவும் இந்தப் படை 24/7 களத்தில் இருக்கும்.

தன்னார்வ மற்றும் அதிகாரப் பகிர்வு: காவல்துறையின் ஒரு அங்கமாகச் செயல்படும் இந்தப் படையில், பயிற்சி பெற்ற துடிப்பான இளைஞர்கள் மற்றும் பெண்கள் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்குத் தற்காப்புக் கலைகள் மற்றும் சட்ட நுணுக்கங்களில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

மின்னல் வேக நடவடிக்கை: ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தப் படைப்பிரிவு அமைக்கப்பட்டு, புகார்கள் வந்த சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்குச் சென்று நடவடிக்கை எடுக்கும் வகையில் வாகன வசதிகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் (GPS/AI) வழங்கப்படும்.

துணிச்சலின் அடையாளம்: ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற முதல் இந்தியப் பெண் அரசி வேலுநாச்சியாரைப் போலவே, சமூக விரோதிகளை எதிர்கொள்ளும் துணிச்சல் மிக்கவர்களை இந்தப் படை கொண்டிருக்கும்.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் ஆதிக்கம் இளைஞர்களைச் சீரழிப்பதாகத் தனது தேர்தல் பிரச்சாரங்களில் சி. ஜோசப் விஜய் தொடர்ந்து கூறி வந்தார். எனவே, போதைப் பொருள் தடுப்புப் படையுடன் இணைந்து இந்த ‘வேலுநாச்சியார் அதிரடிப்படை’யும் செயல்படும். கல்வி நிறுவனங்களுக்கு அருகில் போதைப் பொருள் விற்பனை மற்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுத்து நிறுத்துவதே இதன் முதன்மையான இலக்காகும்.

முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடி முடிவுகள், அவர் வெறும் வாக்குறுதிகளை மட்டும் வழங்காமல், செயலிலும் வேகம் காட்டுவதை உறுதிப்படுத்துகின்றன. வேலுநாச்சியார் பெயரில் ஒரு படையை உருவாக்கியிருப்பது, அவர் தமிழின அடையாளங்களையும், பெண் விடுதலையையும் தனது அரசியலின் மையப்புள்ளியாக வைத்துள்ளார் என்பதைக் காட்டுகிறது.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் அச்சமின்றி வீதியில் நடமாட வேண்டும் என்பதே எனது லட்சியம்” என முதல்வர் விஜய் தனது உரையில் உருக்கமாகத் தெரிவித்தார். இந்த வேலுநாச்சியார் அதிரடிப்படை, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குறிப்பாகப் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்’ தனது முதல் உரையை ஆற்றினார். அதில் பொய் வாக்குறுதிகளை தான் எப்போதும் தருவது கிடையாது என்றும் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றார்.