June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் த.வா.க வேட்பாளர் நா. இராசாநாயகம் தீவிர வாக்கு சேகரிப்பு

செஞ்சி. ஏப்ரல்.19

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கேமரா சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் நா. இராசாநாயகம் செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட காந்தி வீதி, பஜார், சந்தை மேடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்வின் போது பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், “நான் செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றால், மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு முக்கிய அம்சங்களை நடைமுறைப்படுத்த பாடுபடுவேன்” என்று தெரிவித்தார்.
அதன்படி, நீர் பாதுகாப்பு மற்றும் நீர்வள மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், அரசு பள்ளிகளில் சிசிடிவி கேமரா அமைக்கப்படும் என்றும் கூறினார். மேலும், சாதி வாரியான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் எனவும், போதைப் பொருள் இல்லாத தொகுதி உருவாக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
இதனுடன், விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும், கனிம வள கொள்ளையைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். கல்வி சமத்துவம் உறுதி செய்யப்படும் என்றும், மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதை முன்னுரிமையாகக் கொள்ளுவேன் என்றும், மக்கள் ஒத்துழைப்புடன் வளர்ச்சி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், தனது கட்சித் தலைவர் தி. வேல்முருகன் அவர்களுடன் இணைந்து, தொகுதி மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர்ந்து செயல்படுவேன் என்றும் உறுதியளித்தார்.
இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் உடன் மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.அசோக் செஞ்சி ஒன்றிய செயலாளர் ராஜா மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேஷ் அத்தியூர் கோவிந்தன் அண்ணாமலை மற்றும்ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்