June 19, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 560 மனுக்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமைவகித்து, வீட்டு மனைப்பட்டா, தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து, 560 மனுக்களை பெற்று கொண்டார். இதில், தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறித்தினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், துணை ஆட்சியர் (பயிற்சி) சாய் சைதன்யா ஜாதவ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார் மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.