காசிபாளையம் பகுதியில் ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு..
ஈரோடு. ஏப்ரல். 11
ஈரோடு மேற்கு தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் பி. யுவராஜ் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
வருகின்றன ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் மே நாலாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேசிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி. யுவராஜ் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவர் நேத்து தொகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் நாடார் மேடு கொல்லம்பாளையம் அண்ணமார் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவருக்கு அங்கிருந்த பெண்கள் ஆரத்தி எடுத்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
இந்த தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு