June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பெரியார் நகர் இரா. மனோகரன் தீவிர தேர்தல் பிரச்சாரம்.

திறந்த வேனில் சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்..

ஈரோடு. ஏப்ரல். 10

ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரியார் நகர் இரா. மனோகரன் தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தல் 2026, இந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தொடர்ந்து அடுத்த மாதம் மே 04 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் தங்களின் தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பெரியார் நகர் இரா. மனோகரன் கிழக்குத் தொகுதி முழுவதும் கட்சியினர் புடை சூழல் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதன்படி நேற்று அவர் வலையக்கார வீதி, லட்சுமி நைஸ் ஸ்டோர், ரங்கசாமி சந்து, ஜெயராமன் சந்து, புது அக்ரகாரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அவர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்..