கே எம் சி ஹெச் மருத்துவமனை குழுமத் தலைவர் டாக்டர் நல்ல. ஜி. பழனிசாமி தகவல்..
ஈரோடு. ஏப்ரல். 09
ஈரோடு மற்றும் கோவையில் செயல்படும் கே எம் சி ஹெச் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இருதய நோய்க்கு புதிய சிகிச்சை முறை கண்டறியப்பட்டுள்ளதாக, கே எம் சி ஹெச் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜி. நல்ல. பழனிசாமி தெரிவித்தார்.
ஈரோட்டில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்த தகவல்..
ஈரோடு மற்றும் கோவையில் கே எம் சி ஹெச் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது. இதில் பல்வேறு உயர்தர சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு உயர்தர மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகளில், குறிப்பாக மாரடைப்பு நோய்க்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு மாற்றாக புதிய சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக கோவை கே எம் சி ஹெச் மருத்துவமனையில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இருதய மருத்துவர் நிபுணர் டாக்டர்ம. மோகன் அவர்கள் இருதய நலன் மற்றும் ஆலோசனை மற்றும் இருதய நுண்துளை துறையில் நிபுணவத்துவம் பெற்றவர்.
அவர் தற்போது ஈரோடு கே எம் சிகிச்சியில் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
மேலும் கே எம் சி ஹெச் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், இருதயம் மற்றும் அதை சார்ந்த நோய்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள்.
அதிக சிக்கலான ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சை முறை. இருதய ரத்த குழாய் சுண்ணாம்புசத்து படிமானத்திற்கான சிகிச்சை முறை.
இரத்த குழாய் உள் படம் பிடிக்கும் சிறப்பு சோதனை ஸ்டண்ட் சிகிச்சை முறை. இதயம் செயல் இழப்பிற்கான சிறப்பு சிகிச்சை முறை.
இதய தற்காலிக மற்றும் நிரந்தர இதயத்துடிப்பு கருவி. இதய வாழ்வுகளுக்கான அதிநவீன நுண்துளை சிகிச்சை முறைகள்.
இதய ரத்த அழுத்த குறைபாட்டிற்கான சிறப்பு பலூன். அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் மாரடைப்பிற்கான சிறப்பு முதல் நிலை சிகிச்சை.
இது போன்ற சிகிச்சை முறைகளை அவர் வெற்றிகரமாக கையாண்டு வருகிறார்.
மேலும் இதுவரை 10000 ஆஞ்சியோகிராம், 5000 ஆஞ்சியோ பிளாஸ்டிக்ட்,டி,, 1000 ஓ சி டி சிகிச்சைகள்.
இருதய ரத்த ரத்த குழாய் சுண்ணாம்பு படிமானத்திற்கான சிகிச்சை. 250. உள்ளிட்ட சிகிச்சைகளை திறம்பட மேற்கொண்டு வருகிறார்.
இதன் மூலம் அல்ல மனித உயிர்களை காப்பாற்றி உள்ளார். மேலும் நமது ஈரோட்டில் இருதயத்தில் ஏற்படும் நோய்களை உடனடியாக கண்டறிந்து சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகிறது.
இது போன்ற உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முறைகளை வழங்குவதில் கே எம் சி ஹெச் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சிறந்து விளங்குகிறது.
மேலும் இதுவரை21.000 ஆஞ்சியோகிராம்களும்,11.000 ஆஞ்சியோ பிளாஸ்டிட்,1.200 பேஸ் மேக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் 3.000 இருதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சை முறைகளை மேற்கொள்ள சிறந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவும், அதற்கு தேவையான அதிநவீன மேம்படுத்தப்பட்ட உபகரணங்களும் மருத்துவமனையில் உள்ளது என்று மருத்துவமனைத் தலைவர் டாக்டர் நல்ல. ஜி. பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் சர்க்கரை, ரத்த அழுத்தம், நாளமில்லா சுரப்பி, தைராய்டு போன்ற நோய்களுக்கான சிறப்பு சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர் அனிதா செய்தியாளர்கள் மத்தியில் விளக்கம் அளித்தார்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்