திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் பி. எல். விஜயகுமார் மணப்பாறை விராலிமலை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் காலை முதல் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்





பின்னர்மணப்பாறை அதிமுக வேட்பாளர் செய்தியாளரை சந்தித்தார்
அப்போது அவர் பேசியதாவது:
மணப்பாறை சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து
ஜனநாயகக் கடமையை தவறவிடாமல் நிறைவேற்ற வேண்டும்.
மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் விறுவிறுப்பாக காலை முதல் வாக்களர்கள் நீண்ட வரிசையில் நின்று தற்போது வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.
வாக்காளர்கள் மத்தியில் தற்போது நல்ல எழுச்சியுடன் தமிழ்நாட்டிற்கு ஒரு மாற்றம் தேவை என்ற அடிப்படையில் வாக்களித்து வருகின்றனர் நிச்சயமாக எடப்பாடி யார் அலை தமிழகம் முழுவதும் வீசி வருவதால் நிச்சயம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன் என்று அதிமுக வேட்பாளர் விஜயகுமார் பேசினார்

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!