June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறை தொகுதியில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் நான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்

தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரா. கதிரவன் தனது ஜனநாயக கடமையாற்றிய பின்பு பேட்டி

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ரா கதிரவன் காலை 7:00 மணிக்கு வையம்பட்டி ஒன்றியம் இனாம் பொன்னம்பலம் பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்

மணப்பாறை தொகுதி நிச்சயம் மாற்றத்தை எதிர் நோக்கி மக்கள் நீண்ட வரிசையில் நின்று காலை முதல் தனது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர் நிச்சயம் இந்த முறை மணப்பாறையில் மாற்றம் ஏற்படும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் நிச்சயம் தளபதி விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரா கதிரவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்