June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

டெல்லி எஜமானர்களுக்கு பல்லக்கு தூக்கும் எடப்பாடி பழனிசாமி..

மொடக்குறிச்சி பிரச்சார பொதுக்கூட்டத்தில் வைகோ கடும் தாக்கு..

ஈரோடு. ஏப்ரல். 16

தமிழக மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு டெல்லி எஜமானர்களுக்கு பள்ளத்துக்கும் பணியை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செய்தி வருகிறார் என்று மொடக்குறிச்சி மதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வைகோ கடுமையாக தாக்கி பேசினார்.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்து மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை களத்தில் இறக்கி விட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி கட்சியான மதிமுகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்தத் தொகுதியில் மதிமுக சார்பில் சா. செந்தில்நாதன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இவர் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மதிமுகவின் முதன்மைச் செயலாளர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து இருந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு மொடக்குறிச்சி நான்கு ரோட்டில் மீண்டும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அங்கு அமைக்கப்பட்டு இருந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் மதிமுக வேட்பாளர் செந்தில் நாதனே ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது..

மத்திய பாசிச பாஜக தனது ஆட்டோ போஸ்ட் கால்களை தமிழகத்தில் பதிக்க பெரும் முயற்சி எடுத்து. இருப்பினும் அந்தப் பாசிச கும்பலின் எண்ணம் நிறைவேறாது.

மத்திய பாஜக பாசிச கும்பலுக்கு அவர்களை தனது எஜமானார்களாக எண்ணி பல்லக்குத் தூக்கும் பணியினை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செய்து வருகிறார்.

இன்றைக்கு அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் இந்த நாளில் பெரியார் பிறந்த மண்ணில் நான் நின்று பேசுவது பெருமையாக உள்ளது.

தமிழக கலாச்சாரம் மற்றும் திராவிட சித்தாந்தங்களை பற்றி மோடி அமிச்சா, தமிழ்நாட்டில் உள்ள அண்ணாமலைக்கும் என்ன தெரியும்.

தலைவர் கலைஞரின் இறுதி நாளில் தளபதி ஸ்டாலின் அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு கலைஞரை சந்திக்க வைத்தார். அப்பொழுது கண்கலங்கிய தலைவர் கலைஞர் முப்பதாண்டு காலம் எனக்கு தளபதியாக இருந்தாய். சில காலங்கள் என்னை விட்டு பிரிந்து இருந்தாய். மீண்டும் என்னுடன் இணைந்து விட்டாய். என்ற போது உங்களுக்கு துணை நின்றது போன்று இனிவரும் காலங்களில் ஸ்டாலினுக்கும் துணை நிற்க வேண்டும் என்று எனது இரு கரங்களையும் பற்றி கூறிய போது என் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

தொடர்ந்து இன்று வரை எந்த சந்தர்ப்ப சூழ்நிலையிலும் சாலினை விட்டு விலகாமல் நான் உடன் நிற்கின்றேன்.

சட்டம் ஒழுங்கு பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு பேசுவதற்கு என்ன யோகிதை உள்ளது. பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் மறந்து விட்டதா.? சாத்தான்குளம் தந்தை மகன் இருவரும் காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மறந்துவிட்டதா.?

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் 13 பேர் இறந்தது மறந்துவிட முடியுமா.? இது அனைத்தும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடைபெறவில்லையா. அதனால் தமிழக சட்ட ஒழுங்கு பற்றி பேச எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் இல்லை.

தமிழக மக்களுக்காக பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி டெல்லி வரை சென்று வெற்றி பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றவன் இந்த வைகோ.

அதேபோல் எனது மதிமுகவின் வேட்பாளராக மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் செந்தில் நாதனுக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்தால் அவர் இந்த தொகுதி மக்களுக்காக 24 மணி நேரமும் பணியாற்றுவார். அவருக்கு நான் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன். உங்களின் முதல் பணி மொடக்குறிச்சி தொகுதி மக்களின் பணி தான் என்று இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். எனவே அவர் வெற்றி பெற்றாலும் உங்களுடன் தான் பயணிப்பார். வைகோ உறுதி தருகிறேன்.

இவ்வாறு மொடக்குறிச்சி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.