June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மேற்கு தொகுதியில், திறந்த வேணில் தீவிர தேர்தல் பிரச்சாரம்..

திமுக வேட்பாளர் அமைச்சர் சு. முத்துசாமி தீவிரம்..

ஈரோடு. ஏப்ரல். 16.

ஈரோடு மேற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் முத்துசாமி திறந்த வேனில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் சு. முத்துசாமி தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

அந்த வகையில் சூரம்பட்டி 30 வார்டு மற்றும் 49 வது வார்டு பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு விகரித்தார்.

அப்போது அவர் அப்பகுதியில் திறந்த வேணில் நின்றபடி பயணித்து உதயசூரன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் சென்றனர்.