வந்தவாசி, ஜூன் 08:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத ஶ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கோவிலில் நேற்று 13 ஆம் ஆண்டு அன்னக்கூடம் திருப்பாவாடை வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மூல மூர்த்திகள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு மலர் மாலைகள் சாற்றப்பட்டு மகா தீபாராதனை நடந்தேறியது. பிறகு வடித்த அன்னம், இனிப்பு, கார வகைகள் படையலிட்டு அன்னக்கூட திருப்பாவாடை உற்சவம் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தலைமை அர்ச்சகர் ராஜன் ஸ்வாமிகள் அவர்களால் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இரவு திருக்கல்யாண வைபவம் நடந்தேறியது.

More Stories
கும்பாபிஷேக விழா
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்