June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சிறுபான்மையின மக்களின் பாதுகாவலராக இருப்பவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

தேர்தல் பரப்புரையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு பேச்சு.

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் பா அப்துல் சமத் அவர்களுக்கு ஆதரவாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு உதயசூரியன் சின்னத்திற்கு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

மணப்பாறை பொத்த மேட்டுப்பட்டி, காமராஜர் சிலை, மாரியம்மன் கோவில், தந்தை பெரியார் சிலை பொய்கைப் பட்டி, புத்தாநத்தம், மருங்காபுரி, இலங்கா குறிச்சி, வையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் கே என் நேரு தமிழ்நாடு அரசின் ஐந்தாண்டு சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக பேசி வாக்காளர்கள் மத்தியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

மேலும், அவர் பேசுகையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் சுமார் 100 கோடி மதிப்பீட்டில் குளித்தலை மணப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி மணப்பாறை பகுதிக்கு காவிரி குடிநீரை கொண்டு வந்த இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம் தற்போது நமது முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் அந்தத் திட்டத்திற்கு மேலும் 1800 கோடி மதிப்பீட்டில் எந்தவித தடையும் இன்றி காவிரி குடிநீர் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் திட்டம் தீட்டி அந்தத் திட்டத்தை நிச்சயம் நமது ஆட்சி காலத்தில் செய்து முடிப்போம். இதேபோல் சிறுபான்மையின மக்களின் உற்ற தோழனாக எந்தவித சமரசமும் இன்றி தொடர்ந்து உறுதுணையாக இருப்பவர்தான் நமது முதல்வர் மு க ஸ்டாலின்.

எனவேதான், நமது கூட்டணி கட்சிகள் தொடர்ந்து 11 ஆண்டுகளாக எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரே நேர்கோட்டில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இருந்து வருகின்றனர்.

எதிரணியில் இருப்பவர்கள் முதலில் கூட்டணி என்கிறார்கள் பிறகு கூட்டணி இல்லை என் கிறார்கள்

நேற்றும் கூட பாராளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்த போது அந்த மசோதாவிற்கு இந்தியாவில் எதிர்த்து நின்ற ஒரே தலைவர் மு க . ஸ்டாலின் தான். மேலும் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்படுமேயானால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்றும் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடலை பாடி அந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் தளபதி ஸ்டாலின் அவர்கள்

வடநாட்டில் இருக்கும் நான்கு மாநிலங்கள் இருந்தால் போதும் ஆட்சியை பிடித்து விடலாம் என்று உத்திரப் பிரதேசத்தில் எண்பது தொகுதியை 120 தொகுதியாக மாற்றுகிறார்கள் நமது தமிழ்நாட்டில் 39 தொகுதியை 59 தொகுதியாக மாற்றுகிறார்கள்

முறைப்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு படி என்று சொன்னால் நாம் குடும்பக் கட்டுப்பாட்டை நிறைவேற்றிய காரணத்தால் மக்கள் தொகை குறைந்து விட்டது

இதேபோல் விவசாய சட்டத்தை எதிர்க்கிறார்கள் கிறிஸ்தவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பண உதவிகள் வருகிறது அதை தடுக்கிறார்கள் இதையெல்லாம் தடுத்து நிறுத்துகிற ஆட்சியாக பாரதிய ஜனதா கட்சி இருந்து வருகிறது

இவை அனைத்தையும் எதிர்த்து தான் நமது முதலமைச்சர் மு க ஸ்டாலின் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்

மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு பணிகளை குறித்து சட்டசபையில் பல குரல் கொடுத்தவர் நமது அப்துல் சமது . அவருக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மீண்டும் அவரை சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் மணப்பாறை தொகுதி இன்னும் வளர்ச்சி பெற வேண்டும் எனவே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரித்தார்.