July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி காங்கிஸ் கட்சி வேட்பாளர் செல்வகுமார் சாப்பர்த்தி பஞ்சாயத்து மோரன அள்ளி கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்களுக்கு அன்பளிப்பு வழங்கியதை படம் பிடித்த தனியார் நாளிதழ் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும்
செல்லகுமார் ஆதரவாளர்கள் மற்றும் திமுக மேற்கு ஒன்றிய சரவணன் ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாப்பர்த்தி பஞ்சாயத்து மோரன அள்ளி கிராமத்தில் பிரச்சாரத்தின் போது பொதுமக்களுக்கு பரிசாக தாம்புலம் தட்டு வழங்கியதை வீடியோ எடுத்த தனியார் நாளிதல் செய்தியாளர் கவியரசு மீது கொலை வெறி தாக்குதல்.
காவேரிப்பட்டினம் அருகே தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பு: வீடியோ எடுத்த நபர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது வீடியோ பதிவு செய்த நபர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் செல்லகுமார் அவர்கள், காவேரிப்பட்டினம் அருகே உள்ள மோரண அள்ளி கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருடன் திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் பிரச்சார வாகனத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.
பிரச்சார வாகனம் கிராமத்துக்குள் வந்தபோது, சிலர் அதை புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து, பிரச்சாரம் முடிந்து வாகனம் சென்ற பின், அங்கிருந்த பொதுமக்களுக்கு சில்வர் தாம்பூல தட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்த தனியார் நாளிதல் செய்தியாளர் கவியரசு என்பவரை, அங்கு இருந்த கூட்டணி கட்சியினரான காங்கிரஸ் மற்றும் திமுக ஆதரவாளர்கள் சேர்ந்து தடுத்ததாகவும், அவரை கீழே தள்ளி செல்போனை பறிக்க முயற்சி செய்து தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அவரை காலால் உதைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் இரவு சுமார் 9:45 மணியளவில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன், பொதுமக்கள் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை வேட்பாளரை எதிர்பார்த்து காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
திமுக கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி யை சேர்ந்த சுவாமிநாதன் 59 சந்தோஷ் 45 ஜேம்ஸ் 50 சாம்ராஜ் 59 ஆகிய நபர்கள் ஏன் வீடியோ எடுக்கிறாய் வீடியோவை அழித்துவிடு இல்லை என்றால் இங்கயே கொன்று விடுவோம் செய்தி வெளியிட்டாள் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்து கை பேசியை வாங்க முயற்சி செய்து இழுத்து கீழே தள்ளி காலால் நெஞ்சு பகுதியில் மிதித்து கை பேசியை கலவாடி சென்றனர் அதில் இருந்த பாஸ்வர்ட் தெரியாததால் வீடியோ ஆதாரம் அழிக்க முடியாத நிலையில் பின் நம்பர் கேட்டு அடித்தனர் அப்போது சுதாரித்து கொண்டு நண்பருக்கு போன் செய்து உதவி கேட்டு 108 அவசர ஊர்தி மூலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இதனை காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் மயக்கம் தெளிந்து தானாக சென்று புகார் மனு கொடுத்துவிட்டு தன்னுடைய கை பேசி ஆதாரம் அழிய கூடாது என்று கைபேசியை மீட்டு தருமாறு காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க காவலர்கள் உடன் சென்று தனது கை பேசியை மீட்டு சம்பவம் குறித்து செய்தி நிறுவனம் மற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் ஐயா அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவலை பகிர்ந்தார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.