தொகுதி முழுவதும் தொண்டர்கள் புடை சூழ வாக்கு சேகரிப்பு.
ஈரோடு. ஏப்ரல். 12
ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் முத்துசாமி தொகுதியில் தொண்டர்கள் புடை சூழ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக வேட்பாளராக ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் சு. முத்துசாமி தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இதனைத் தொடர்ந்து நேற்று தொகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் புடை சூழ அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு சென்ற திமுக வேட்பாளர் அமைச்சர் முத்துசாமிக்கு தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.