ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன் தீவிர தேர்தல் பிரச்சாரம்.. நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு.. ஈரோடு. ஏப்ரல்.12 ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன் தனது தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வருகின்ற 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மே மாதம்04 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பி. கோபிநாத் பழனி அப்பன் அறிவிக்கப்பட்டு அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த பின் தொகுதி முழுவதும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன் திமுக, காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் புனட சூழ அவர் தொகுதி முழுவதும் கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு