திடீர் சோதனையால் மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பு..
ஈரோடு. ஜூலை04
ஈரோடு மாநகராட்சி நேற்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே, ஈரோடு மாநகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது. தற்போதைய மேயராக திமுகவை சேர்ந்த நாகரத்தினம், மேயராக செல்வராஜ் ஆகியோர் பொறுப்பில் உள்ளனர்.
மாநகராட்சியின் ஆணையாளராக ஆர்பித் ஜெயின் என்பவர் பணியாற்றி வருகிறார்.
காலையில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சாந்தி, இன்ஸ்பெக்டர் ரேகா ஆகியோர் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அலுவலகத்தில் சல்லடை போட்டு சோதனை செய்தனர். அப்பொழுது பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் தீவிர விசாரணையை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
சோதனைக்குப் பிறகு பணம் மற்றும் ஆவணங்கள் குறித்த விவரம் தெரிய வரும்.

More Stories
உள்ளாட்சித் துறையில் ஒரே நேரத்தில் 41 இடங்களில் விஜிலென்ஸ் போலீஸாரால் நடத்திய ரெய்டில்.. ரூ.58 லட்சம் சிக்கியது!