கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த மத்தூர்பதி பகுதியில், மர்ம நபர்கள் ஹோட்டல் ஒன்றிற்குத் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தூர்பதி கிராமத்தில் செயல்பட்டு வந்த சிறிய ஹோட்டல் ஒன்றை இலக்காகக் கொண்டு, நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். தீ மளமளவென பரவி கடையின் பெரும்பகுதியைச் சூழ்ந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் உடனடியாகத் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
தகவல் கிடைத்தவுடன் போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, தீ மேலும் பரவாமல் தடுத்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும், கடையிலிருந்த தளவாடப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகின
செய்தியாளர் முபாரக் 8428723357

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!