சேலம்,25/04/2026.சேலம் ஓமலூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் 10 வயது சிறுவன் வெட்டி படுகொலை.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் 10 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பொட்டியபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற பெண், தனது கணவர் பிரிந்து சென்ற நிலையில் ஓமலூரில் உள்ள ஒரு தனியார் ஷோரூமில் வேலை பார்த்து வந்தார். அங்கு மேலாளராக பணியாற்றிய சக்திவேல் என்பவருடன் சத்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சத்யா அவரிடம் சரியாக பேசாததால், சத்யாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கலாம் என சக்திவேல் சந்தேகமடைந்து ஆத்திரத்தில் இருந்துள்ளார்.இந்நிலையில், நேற்று இரவு சத்யாவின் வீட்டிற்குச் சென்ற சக்திவேல், அவர் நீண்ட நேரம் கதவைத் திறக்காததால் ஆத்திரமடைந்தார். கதவைத் திறந்தவுடன் வீட்டிற்குள் புகுந்த சக்திவேல், மின்விளக்கை அணைத்துவிட்டு சத்யாவையும் அவரது 10 வயது மகன் கிஷாந்தையும் கத்தியால் சரமாரியாகக் குத்தினார். இதில் சத்யாவின் மணிக்கட்டு துண்டானது. படுகாயமடைந்த இருவரும் அலறியபடி உதவி கோரவே, அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், கழுத்து மற்றும் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் கிஷாந்த் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். கரம் துண்டான நிலையில் உயிருக்கு போராடிய சத்யா, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஓமலூர் போலீசார், தப்பியோடிய சக்திவேலை தீவிரமாகத் தேடி வந்தனர்.போலீசார் தேடி வந்த நிலையில், கருப்பூர் அருகே உள்ள கோரிமேடு காட்டுப்பகுதியில் சக்திவேல் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சக்திவேலுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சத்யாவுடனான இந்த பழக்கத்தால் அவரது மனைவியும் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தது விசாரணையில் உறுதியானது. கள்ளக்காதல் சந்தேகத்தால் சிறுவன் கொல்லப்பட்டு, கொலையாளியும் தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பொட்டியபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற பெண், தனது கணவர் பிரிந்து சென்ற நிலையில் ஓமலூரில் உள்ள ஒரு தனியார் ஷோரூமில் வேலை பார்த்து வந்தார். அங்கு மேலாளராக பணியாற்றிய சக்திவேல் என்பவருடன் சத்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சத்யா அவரிடம் சரியாக பேசாததால், சத்யாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கலாம் என சக்திவேல் சந்தேகமடைந்து ஆத்திரத்தில் இருந்துள்ளார்.இந்நிலையில், நேற்று இரவு சத்யாவின் வீட்டிற்குச் சென்ற சக்திவேல், அவர் நீண்ட நேரம் கதவைத் திறக்காததால் ஆத்திரமடைந்தார். கதவைத் திறந்தவுடன் வீட்டிற்குள் புகுந்த சக்திவேல், மின்விளக்கை அணைத்துவிட்டு சத்யாவையும் அவரது 10 வயது மகன் கிஷாந்தையும் கத்தியால் சரமாரியாகக் குத்தினார். இதில் சத்யாவின் மணிக்கட்டு துண்டானது. படுகாயமடைந்த இருவரும் அலறியபடி உதவி கோரவே, அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், கழுத்து மற்றும் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் கிஷாந்த் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். கரம் துண்டான நிலையில் உயிருக்கு போராடிய சத்யா, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஓமலூர் போலீசார், தப்பியோடிய சக்திவேலை தீவிரமாகத் தேடி வந்தனர்.போலீசார் தேடி வந்த நிலையில், கருப்பூர் அருகே உள்ள கோரிமேடு காட்டுப்பகுதியில் சக்திவேல் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சக்திவேலுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சத்யாவுடனான இந்த பழக்கத்தால் அவரது மனைவியும் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தது விசாரணையில் உறுதியானது. கள்ளக்காதல் சந்தேகத்தால் சிறுவன் கொல்லப்பட்டு, கொலையாளியும் தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!