வந்தவாசி, மார்ச் 25:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சமேத ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா நேற்று கருடக் கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. முன்னதாக இந்த வைபவத்தில் மூல மூர்த்திகள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. உற்சவ மூர்த்திகள் மேளதாளத்துடன் வீதியுலா வந்தனர்.

More Stories
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!