இந்த ஆண்டு, வரும் 21.12.2025 அன்று புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை ஐந்து (5) வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ மருந்து சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 74,698 குழந்தைகளும் பயனடைவர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கிராமம் மற்றும் நகரப்புறங்களில் 425 முகாம்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களான பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், பூங்காக்கள், கோவில்கள் மற்றும் வணிக வளாகங்களில் 31 இடங்களிலும் சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், உடல் ஊனத்தை உண்டாக்கக்கூடிய போலியோ நோயிலிருந்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ள இந்த சிறப்பு முகாம்களை அணுகி பயனடையுமாறு சுகாதாரத்துறை கேட்டுக்கொள்கிறது.
–சுகாதாரத்துறை இயக்குநர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்