வேலூர், டிச 19 –
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வேலூர் மாவட்டத்தில் 01.01.2026 தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் 2026 கடந்த 04.11.2025 அன்று தொடங்கப்பட்டு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் மீண்டும் திரும்ப பெறப்பட்டு
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் அனைத்து வாக்காளர்களின் கணக்கெடுப்பு படிவங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான வாக்காளர்கள் விவரங்கள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியலை வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில்
(43) வேலூர் 198722,
(40) காட்பாடி 215751,
(44) அணைக்கட்டு 227645,
(45) கீழ்வைத்தியணான்குப்பம் 2,07,382, (46) குடியாத்தம் 2,38,505 என மொத்தம்
ஆண் வாக்காளர்கள் 5,28,619
பெண் வாக்காளர்கள் 5,59,236 மூன்றாம் பாலினத்தவர் 150 என 10,88,005 வாக்காளர்கள் உள்ளதாகவும்
தற்போது ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் இறப்பு 48,305,
நிரந்தர குடிப்பெயர்வு 71,719,
இருமுறை பதிவு 10,055,
கண்டறிய இயலாதவர்கள் 84,429 மற்றும் மற்றவை 517 என 2,15,025 நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
ஏற்கனவே மாவட்டத்தில் இருந்த
1314 வாக்குச்சாவடிகள் 1200 பேருக்கு ஒரு வாக்குசாவடி என மறுசீரமைப்பு செய்யப்பட்டு அதில் 113 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டு தற்போது 1427 வாக்குச்சாவடிகள் வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்