வந்தவாசி , டிச 07:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சேத்பட் ரோட்டில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பற்றி சிறப்புரை ஆற்றினர். மேலும் உடனடி தீர்வு கண்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மருந்துகள், செவி குறைபாடு அடைந்தோருக்குகாது கேட்கும் கருவிகள் உள்ளிட்டவைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் செய்யார் மாவட்ட சுகாதார அலுவலர் சதீஷ் குமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தமீன்கான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏ.பி.வெங்கடேசன், பிரபாகரன், வந்தவாசி நகர செயலாளர் தயாளன், நகர மன்ற தலைவர் ஜலால், துணைத் தலைவர் அன்னை சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், டிடிகே. ராதா, நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்