*வந்தவாசியில் கலை பண்பாட்டுத் துறையின் கோடைக்கால கலைப் பயிற்சி முகாம் நிறைவு விழா..!*வந்தவாசி, மே 15:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் ஜவகர் சிறுவர் மன்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான கோடைகால கலைப்பயிற்சி முகாம் நிறைவிழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ப.ஞானசம்பந்தன் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் பெ.பார்த்திபன் வரவேற்றார். தலைமை ஆசிரியர்கள் க.வாசு, டி.ஆர்.நம்பெருமாள், வழக்கறிஞர் சா.இரா. மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், பட்டதாரி ஆசிரியர் கோபிநாத், ஆசிரியை கண்மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியாக படைக்கப்பட்டது. மேலும் சிலம்பம் சுழற்றல், கீபோர்டு வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகளை மாணவர்கள் மேற்கொண்டனர். நிகழ்வில் பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கீபோர்டு கலைஞர் ஜேம்ஸ், சிலம்பம் மாஸ்டர் பெ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வை கேப்டன் பிரபாகரன் தொகுத்து வழங்கினார். இதில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இறுதியில் ஓவிய ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.