வந்தவாசி, மே 15:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் சிறப்பு பயிற்சி பெற்று நடைபெற்ற அரசு பொதுத் தேர்வில் +2 நேரடி தனித்தேர்வு எழுதி 449 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். மேலும் அவர் தமிழில் 98 மதிப்பெண்கள் பெற்று வந்தவாசி பகுதியில் சிறப்பிடம் பெற்றமைக்கு தனித் தேர்வு மாணவி பி.சித்ராவுக்கு பாராட்டு விழா ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், முதுகலை தமிழாசிரியர் பூங்காவனம், முதுகலை ஆசிரியர் பூபாலன், ஆசிரியர் மகாவீர் உள்ளிட்ட மாணவ மாணவிகள் பலரும் பங்கேற்றனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!