புதுச்சேரி:
லட்சிய ஜனநாயக கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், புதுச்சேரி மாநிலத்திற்கான முக்கியப் பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில்
மாநில இளைஞரணி துணைத் தலைவர்: திரு. சர்மா
மாநில தொண்டரணி துணைத் தலைவர்: திரு. வேல்முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்புகளை வழங்கிய லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் திரு. தோஸ்த் சார்லஸ் மார்ட்டின் அவர்களுக்கு, சர்மா மற்றும் வேல்முருகன் ஆகிய இருவரும் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், இளைஞர்கள் மற்றும் தொண்டர்களை ஒருங்கிணைத்து செயல்படுவதிலும் தாங்கள் தீவிரமாக ஈடுபடப்போவதாக புதிய நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்