June 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறை ரயில் நிலையம் அருகே உடல் நசுங்கிய நிலையில் ஆண் சடலம்: யார் அவர்? – ரயில்வே போலீசார் தீவிர விசாரணை

மணப்பாறை, ஜூன் 29:

திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையத்தின் மூன்றாவது நடைமேடை அருகே, சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உடல் நசுங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை ரயில்வே ஊழியர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, மூன்றாவது நடைமேடை அருகே தண்டவாளத்தில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக திருச்சி ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், அவரது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இதுவரை தெரியவரவில்லை.
இந்த சம்பவம் ரயிலில் அடிபட்டு நிகழ்ந்த விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இறந்த நபர் யார் என்பது குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள ரயில்வே காவல் நிலையத்தை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு ரயில்வே போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.