June 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அமைச்சரைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் ஈரோட்டில் நடைபெற்றது

தமிழக மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார், போதைப் பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ பதிவினை அறிந்த திமுகவினர், தமிழக அரசு மற்றும் அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் சரத்குமாரை கண்டித்தும் அவர் பதவி விலக வேண்டும் என்று அறிக்கை வைத்தும், ஈரோடு காளை மாட்டு சிலை, சிம்னி ஹோட்டல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்பி கே இ பிரகாஷ், மண்டல குழு தலைவர் பி கே பழனிசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டிருந்தனர்.