சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம் யோகாசன பாரத், இனணந்து லாஸ்பேட்டை பல்நோக்கு விளையாட்டு அரங்கில் புதுச்சேரி மாவட்ட அளவிலான யோகாசன விளையாட்டு போட்டி துவங்கியது இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர்.நிறைவு விழா நிகழ்ச்சியில் சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்க தலைவர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி குத்துவிளக்கேற் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்,சங்க துணை செயலாளர் டாக்டர் பாலாஜி வரவேற்றார், சங்க செயலாளர் தயாநிதி ஆண்டு அறிக்கை விளக்கினார், முதன்மை விருந்தினராக புதுச்சேரி அமைச்சர் சிவக்கொழுந்து ,சட்ட மன்ற உறுப்பினர் செந்தில் என்கிற ரமேஷ், இந்தியன் வங்கி ஊழியர் சங்க தலைவர் ரேணுகா தாமஸ் கலந்துக்கொண்டனர்,


சிறப்பு விருந்தினராக சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்க மூத்த துணை த்தலைவர் கஜேந்திரன் சங்க துணை தலைவர் தேவசேனாபவனானி, சங்க பொருளாளர் சண்முகம் சங்க உறுப்பினர் செந்தில் குமார் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள் யோகா நடுவர்கள் கவுரவிக்கப்பட்டனர் நிகழ்ச்சியின் முடிவில் சங்க துணை செயலாளர் ரீனா ஜோசப் நன்றி கூறினார்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!