திருச்சி ஜுன் 29-
திருச்சி அருகே வையம்பட்டியில் இயங்கும் தனியார் சிட் பண்ட் கம்பெனி திருச்சி, துவரங்குறிச்சி, துறையூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளில் கிளை தொடங்கி ரூபாய் ஒரு லட்சம் முதல் 50 லட்சம் வரை சீட்டு நடத்தி சுமார் 2,500 பேரிடம் சீட்டு பணம் வாங்கிவிட்டு சீட்டு காலம் முடிந்த பிறகு முதிர்வு பணத்தை தராமல் ரூபாய் பல லட்சம் ஏமாற்றி விட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள்
சீட் பண்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்து இருந்தனர். இந்நிலையில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர்ரை சந்தித்து மனு கொடுக்க இன்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து சிட் பண்ட் நடத்தி எங்களை ஏமாற்றிய நிறுவனஉரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு மனு அளித்தனர்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!