August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

போச்சம்பள்ளியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்: ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் பாதிப்பு. வேறு ஆட்களை கொண்டு ரேஷன் உணவு பொருட்களை ஏற்றி செல்லும் அதிகாரிகள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சுமை தூக்கும் தொழிலாளர் களுக்கான சங்கத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.


​ கடந்த ஆண்டு முதல் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள 60 சதவீத கூலி உயர்வை உடனடியாக வழங்கி அமல்படுத்த வேண்டும்.
​தொழிலாளர்களின் இந்த திடீர் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் காரணமாக, போச்சம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட வேண்டிய அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல முடியாமல் கடும் பற்றாக்குறை ஏற்பட்டது.​இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்குப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளும் போச்சம்பள்ளி காவல் துறையினரும் சுமைதூக்கும் தொழிலாளர்களிடம் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், அதிகாரிகள் வெளியாட்களை அழைத்து வந்து லாரிகள் மூலம் ரேஷன் பொருட்களை ஏற்றும் பணியை மேற்கொண்டனர்.
​வெளிநபர்களைக் கொண்டு பொருட்கள் ஏற்றப்பட்டபோதிலும், பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் எவ்வித வன்முறையிலும் ஈடுபடாமல் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். வாணிபக் கழக வளாகத்திலேயே தரையில் உட்கார்ந்தும் படுத்தும், “தங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை இவ்விடத்தை விட்டு நகர மாட்டோம்” என உறுதிபடத் தெரிவித்து காத்துக் கிடக்கின்றனர்.அரசு அதிகாரிகளும் நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகமும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.