புதுச்சேரி:
புதுச்சேரி அரும்பாத்தபுரத்தில் இயங்கி வரும் கிரவுண் ஏரோ பைலட் அகாடமி (Crown Aero Pilot Academy) சார்பில், விமானி பயிற்சி பெறுவதற்காக ஹங்கேரி நாட்டிற்குச் செல்லும் 11 மாணவர்களுக்கு வழியனுப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள 11 மாணவர்களும் ஹங்கேரி நாட்டிற்குச் சென்று அங்குள்ள சர்வதேச விமானப் பயிற்சிப் பள்ளியில் தீவிரப் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.
இதற்கான பயிற்சி காலம் சுமார் 12 மாதங்கள் இருக்கலாம் பயிற்சி
முடிந்தவுடன் சர்வதேச அங்கீகாரம் பெற்ற விமானி உரிமத்தை (Pilot License) மாணவர்கள் பெறுவார்கள்.
பயிற்சி முடித்த பின் மாணவர்கள் இந்தியாவிற்குத் திரும்பி இங்குள்ள விமான நிறுவனங்களில் பணியில் சேரலாம் அல்லது ஐரோப்பிய நாடுகளிலேயே தங்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இன்று 11.05.26 நடைபெற்ற சிறப்பான நிகழ்வில், முன்னாள் அமைச்சர் லட்சுமி நாராயணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் மாணவர்களுக்கான பாஸ்போர்ட், விசா மற்றும் பயிற்சி தொடர்பான ஆவணங்களை வழங்கி, அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வின் போது அவர் பேசுகையில், புதுச்சேரி மாணவர்கள் இது போன்ற சர்வதேச தரத்திலான பயிற்சிகளைப் பெற்று, உலக அளவில் விமானப் போக்குவரத்துத் துறையில் சாதிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அகாடமியின் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்