August 25, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலில் அமைந்துள்ள சாய்பாபா கோவில் சுவாமி தரிசனம் செய்ய வந்த வந்த நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசுகையில்:

கோட் பட தயாரிப்பாளர்,ஜனநாயகன்பட தயாரிப்பாளர்களுக்கு அரசில் பெரிய பொறுப்புகள் கொடுத்துள்ளனர்,
நான் தமிழக வெற்றி கழகத்தில் ஏதோ சேர்ந்தேன்,இதுவரையில் அமைதியாக தான் இருந்து கொண்டு உள்ளேன்,அந்தக் கட்சியில் இருக்கேனா இல்லையா என்பது கூட எனக்கு தெரியாது.

நான் எனது வேலையை பார்த்துக் கொண்டுள்ளேன்.
எனக்கு அதையெல்லாம் விட தற்போது கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது,காவல் நிலையங்களில் நடக்கும் கொலைகள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள் இதெல்லாம் நடக்கக்கூடாது அதுதான் எனக்கு ரத்தம் கொடுக்கிறது.

அதேபோல கர்நாடக அரசு அணை கட்டுவதும் தேவையில்லாத விஷயம்.அது கட்டக்கூடாது.தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என்ற நோக்கோடு தான் கர்நாடகாவில் அணை கட்டப்படுகிறது.இதனால் பல லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் அழிந்து விடும் கால்நடைகள் பாதிக்கப்படும்,கர்நாடக அணை கட்டினால் மிகப்பெரிய பாதிப்பிற்கு உள்ளாகும் அணை கட்டுவது எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இன்று ஒரு பழனி பாபா, வீரப்பன், பிரபாகரன், தமிழரசன் இவர்களெல்லாம் இல்லை என்று நினைத்துக் கொண்டு உள்ளார்கள்.

ஆனால் இவர்கள் எல்லாம் உருவாகி விடுவார்கள் இந்தியாவில் மிகப் பெரிய புரட்சி வெடிக்கும்.

எஸ்ஐஆர், நீட், இவிஎம் மெஷினுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் விரைவில் வெடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் மன்சூர் அலிகான் கூறினார்.

செய்தியாளர் பழனிவேல்