August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 255 ஆவது நினைவு தினம்..

திருச்செங்கோட்டில் தவெக சார்பில் நினைவு நாள் அனுசரிப்பு..

திருச்செங்கோடு. ஆகஸ்ட். 21

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 255 வது நினைவு தினம் திருச்செங்கோட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்ட பல மாவீரர்களில் ஒண்டிவீரன் அவர்களும் ஒருவர். இவர் வீரத்துடன் ஆங்கிலேய படையினரை எதிர்த்து போரிட்டு வெற்றி கண்டவர்.

இவர் மறைந்து 255 ஆண்டுகள் ஆகின்றது. இதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட மாவீரர் ஒண்டிவீரன் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் அன்னாரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று திருச்செங்கோடு ஒன்றிய நகர தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் 255 வது நினைவு நாள் நினைவு கூறப்பட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், கட்சியின் பொதுச்செயலாளர், அமைச்சர் என். ஆண் ஆனந்த் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே ஜி அருண்ராஜ் ஆகியோரின் அறிவுறுத்தலின் படியும், வழிகாட்டுதலுடன் இந்த நிகழ்ச்சியானது சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் இப்ராஹிம், நாகராஜ், ஒன்றிய செயலாளர் சக்திவேல், உதயகுமார், குணசேகரன், விக்னேஷ், மல்லசமுத்திரம் கிருஷ்ணன், தனபால், கந்தசாமி, பிரசாத், முத்துசாமி, வழக்கறிஞர் சதீஷ்குமார், செல்வகுமார், மாதேஸ்வரன் மற்றும் விசிக கட்சியை சேர்ந்த சக்தி பரமசிவம், பிரகதீஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.