திருப்பூர்: ஜூன் -02
இளைஞர் அணி இணைச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் உசேன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கழகப் பேச்சாளர் கருப்புசாமி பாண்டி மாணவரணி செயலாளர் ரியாஸ் ஒன்றிய இளைஞரணி தலைவர் ஷேக் பல்லடம் ஒன்றிய தலைவர் முகமது அலி மாவட்ட தலைவர் ஷாஜகான் சிறப்புரை நிகழ்த்தினார். மாவட்டத் துணைத் தலைவர் நூர் முகமது மாவட்ட துணைச் செயலாளர் அர்ஷத் அலி மற்றும் ரபிக் அர்ஷத் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மதங்கள் வேறுபட்டாலும் மனிதநேயம் ஒன்றே என்ற உயரிய எண்ணத்தை மக்களிடையே பரப்புவதே இந்த இயக்கத்தின் நோக்கம் ஆகும்.
நமது இந்திய நாடு பல்வேறு மதங்கள் மொழிகள் கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்கள் நிறைந்த ஒரு அற்புதமான தேசமாகும்
இங்கு
இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், சீக்கியம், புத்தம், சமணம்,
உள்ளிட்ட பல மதங்கள் சேர்ந்த மக்கள் சகோதரத்துவ உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் சில நேரங்களில் தவறான புரிதல்கள் வதந்திகள் மற்றும் பிரிவினை சிந்தனைகள் காரணமாக மனிதர்களிடையே இடைவெளிகள் உருவாக்குகின்றன
இதனை தடுக்கவும் மனித நேயத்தையும் மத நல்லிணக்கத்தையும் வளர்க்கவும் உருவாக்கப்பட்ட அமைப்புதான்
பல் சமய நட்புறவு கழகம்
பல மதங்களை சேர்ந்த மக்கள் தங்களது தனித்துவங்களை மதித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் ஹபுரிந்து கொண்டு அன்பு ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்துடன்
வாழ்வதே பல் சமய நட்புறவாகும்
.
மதங்கள் வேறுபட்டாலும் மனிதநேயம் ஒன்றே என்ற உயரிய எண்ணத்தை மக்களிடையே பரப்புவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.
ஏன் இந்த கழகம் தேவை??
இன்றைய உலகில் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மனித உறவுகள் பல இடங்களில் பலவீனம் அடைந்து வருகின்றன.
சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகள் மத வெறுப்பு கருத்துக்கள் மற்றும் அரசியல் சுயநலன்கள் காரணமாக மக்களிடையே பிரிவினை ஏற்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் பல் சமய நட்புறவு கழகம் ஒரு பாலமாக இருந்து மக்களை இணைக்கிறது.
ஒரு மனிதன் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் பசியால் வாடினால் உணவு தேவை, நோயற்றால் சிகிச்சை தேவை துன்பத்தில் இருந்தால் ஆறுதல் தேவை, இதுவே மனிதநேயம் இதுவே பல் சமய நட்புறவின் அடிப்படை கழகத்தின் முக்கிய செயல்பாடுகள் பல்வேறு சமூக பணிகளை மேற்கொள்ளலாம்.
மரக்கன்று நடுதல் ரத்ததான முகாம்கள் இலவச மருத்துவ முகாம்கள் மாணவர்களுக்கு கல்வி உதவி சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரிடர் கால நிவாரண உதவிகள் மத நல்லிணக்க கருத்தரங்குகள் இளைஞர் விழிப்புணர்வு முகாம்கள் தேசிய தின விழாக்கள்
இவற்றில் அனைத்து மத மக்களுடன் இணைந்து செயல்படும்போது சமூக ஒற்றுமை வலுப்பெறும் இளைஞர்களின் பங்கு நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் உள்ளது. இளைஞர்கள் மத வெறுப்பை அல்ல மனிதநேயத்தை கற்றுக் கொள்ள வேண்டும் சண்டை யைஅல்ல சமாதானத்தை உருவாக்க வேண்டும் பிரிவினையை அல்ல ஒற்றுமையை வளர்க்க வேண்டும் பல் சமய நட்புறவுக் கழகத்தில் அதிக அளவில் இளைஞர்கள் பங்கேற்பதின் மூலம் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.
என பல்வேறு உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன..

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்