June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

நிலக்கடலை மற்றும் உளுந்து சாகுபடி: நுண்ணீர் தெளிப்பு பாசனம் பயிற்சி

வந்தவாசி, டிச 15:

சென்னை பல்லாவரம், வேல்ஸ் அறிவியல் தொழில் நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம், ( VISTAS) சார்பில், திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் ஒன்றியம், ஆதிதிராவிடர் சமூகத்தின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக, திரக்கோயில் கிராமத்தில்‌ தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான DST SEED STI HUB மையம் ( DST/SEED//SCSP/STI / 2022/937) மூலம் “நிலக்கடலை மற்றும் உளுந்து சாகுபடியில் நுண்ணீர் தெளிப்பு பாசனம்” பயிற்சியானது டிசம்பர் 12 & 13 ஆகிய தேதிகளில் தெள்ளார் வட்டத்தில் உள்ள VISTAS DST SEED STI- HUB மையத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், DST விதை STI – HUB முதன்மை ஆய்வாளருமான முனைவர் எம்.சந்திரசேகரன் நிகழ்ச்சியின தொடங்கி வைத்து வரவேற்றார். இந்த மையத்தின்‌ சாதனைகளையும் மற்றும் விவசாயிகள் லாபம் ஈட்டும் பயிர்களான நிலக்கடலை மற்றும் உளுந்தை மதிப்பு கூட்டி அதிகப்படியான லாபங்களை பெரும்‌ வழிமுறைகளை விளக்கி கூறினார், DST SEED STI – HUB திட்டத்தின் ஆலோசகர், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (பொறுப்பு) முனைவர் எம்.பாஸ்கரன் தொடக்க விழாவினை கௌரவித்து,
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு விதமான பயிர் அமைப்பு முறை தொழில்நுட்பங்களை விளக்கியும், நுண்ணீர் தெளிப்பு பாசன உபகரணங்களை பயன்படுத்தி அதிகப்படியான லாபம் ஈட்டும் பயர்களை உற்பத்தி செய்து விளைபொருட்களை மதிப்புக் கூட்டி லாபம் ஈட்டும் முறைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

முதல் நாள் பயிற்சியினை வேல்ஸ் பல்கலைக்கழக வேளாண்மை புலத்தில் பணிபுரியும் எம்.அன்பரசு மற்றும் ஒருங்கிணைப்பாளர் முனைவர்‌ பி.சம்பத்குமார் ஆகியோரும், இரண்டாம் நாள் பயிற்சியினை விதைச் சான்று அலுவலர் சுந்தரமூர்த்தி, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை துறையில் பணிபுரியும் முனைவர் எம்.அன்பரசு, கே.அருண் (Agripreneur) ஆகியோர் பங்கேற்று வேளாண்மையில் அதிக விளைப்பொருட்களை தரக்கூடிய நெல், நிலக்கடலை மற்றும் உளுந்து வகைகளையும், அதன் சாகுபடியில் நுண்ணீர் தெளிப்பு பாசனத்தின் மூலம் அதிக மகசூல் ஈட்டுவது பற்றியும் விழக்கினர். மேலும் உற்பத்தியைப் பெருக்கி விளைப் பொருட்களை மதிப்பு கூட்டி விவசாயிகள் லாபம் ஈட்டும் முறைகளை செயல்விளக்கத்துடன் அளித்தனர். இதில் திரக்கோயில் கிராமத்தில் பணி புரியும் இரா.விஜயகுமார்,வி.லக்ஷ்மி, பூவரசன், பிரசாந்த், இளையபெருமாள், ஏ.மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். தெள்ளாறு ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் பயனடைந்தனர். இறுதியில் STI HUB திரக்கோயில் முனைவர் பி.சம்பத்குமார் நன்றி உரை கூறினார்.