வந்தவாசி, ஜூன் 14:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை அன்னக்கூடம் திருப்பாவாடை வைபவம் நடைபெற்ற பிறகு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இரவு உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தேறியது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அர்ச்சகர் ராஜன் ஸ்வாமிகள் மேற்பார்வையில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக நாம் சங்கீர்த்தனம் பஜனை நடைபெற்றது.

More Stories
கோவை
புதுவை முத்தியால்பேட்டை பெரியபாளையத்தம்மன் தேவஸ்தான 106-வது ஆண்டு ஆடித்திருவிழா: இன்று நான்காம் நாள் நிகழ்ச்சி!
திருவண்ணாமலை திருவாசக தெய்வீக மாநாடு: புதுவையில் பத்திரிகையாளர் சந்திப்பு